{[['']]}
இன்று பேஸ்புக் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.
எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?
முதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.
பின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்
Download செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்த பின் task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும்.
க்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.
EN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும்.
டிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.
பின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, "வணக்கம்" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், "vanakkam" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும்.
மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், "காட்டும்" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக "காட்டும்" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.
இவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.
குறிப்பு:
1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம்.
2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.
3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,
+ comments + 1 comments
பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான Softwere >>>>> Download Now
>>>>> Download Full
பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான Softwere >>>>> Download LINK
>>>>> Download Now
பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான Softwere >>>>> Download Full
>>>>> Download LINK
Post a Comment